“அலப்பறை கெளப்புறோம்... தலைவர் நிரந்தரம்..” ஜெயிலர் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 
ஜெயிலர் ஜெயிலர்

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 

Image

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், ஆகியோர் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 


இதைத்தொடர்ந்து நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் தமன்னா, விநாயகன் ஆகியோரை தவிர முதல் பாகத்தில் நடித்த மற்ற அனைவரும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் அட்பேட் கொடுத்துள்ளது. மேலும் ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.