மீனவர்கள் நலன் காக்கப்படும்- முதல்வருக்கு ஜெய்சங்கர் கடிதம்

 
ஜெய்சங்கர் முக ஸ்டாலின்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

dd

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்திடவும் வலியுறுத்தி  ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின்
நலன் காப்பதில் மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. நமது மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.