நாம் தமிழர் கட்சியில் வெடித்த மோதல்! சீமான் இந்துத்துவா சக்திகளுக்கு உதவுவதாக குற்றச்சாட்டு

 
பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

சீமான் பேசுவது தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.. சங்கி என்றால் தோழன் என்ற கருத்தையே எதிர்த்தேன் என பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், “திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையும் அழித்து வந்தது ஆரியம். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும் அன்றைக்கு அரவணைத்தும் மார்க்சிஸ்ய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்ட்டுகள்தான். திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் தனது நோக்கம் என சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து. திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சீமான் இருக்க வேண்டும்.

ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, சீமான் கருத்து ஆர்.எஸ்.எஸ்., பாஜக சங்பரிவார் அமைப்புகளுக்கு துணை போகும். பெரியார் பற்றிய சீமானின் கருத்து நாம் தமிழரின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. சீமான் பேசுவது தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.. சங்கி என்றால் தோழன் என்ற கருத்தையே எதிர்த்தேன். பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல ஏற்றார்போல சீமான் தயாராக வேண்டும்” என்றார்.