ஜெகபர் அலி கொலை- திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்

 
ஜெகபர் அலி கொலை- திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்

சட்ட விரோத கல்குவாரி களுக்கும் கனிமக் கொள்ளைக்கும் எதிராக மனு கொடுத்த ஜகபர்அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரனை திருச்சி சரக டிஐஜி வருண் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர் சட்டவிரோத கனிம வளக் கொள்ளைக்கு எதிராக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு ராமையா ராசுவின் மகன் தினேஷ்குமார் லாரி உரிமையாளர் முருகானந்தம் லாரி ஓட்டுநர் காசிநாதன் ஒலித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்
இந்த வழக்கை புதுக்கோட்டை ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் சிபிசிஐ போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் தான் சட்ட விரோத கல்குவாரி களுக்கும் கனிமக் கொள்ளைக்கும் எதிராக மனு கொடுத்த ஜகபர்அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரனை திருச்சி சரக டிஐஜி வருண் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜகபர் அலி கொலை வழக்கு மட்டுமின்றி, ரவுடிகளுடன் தொடர்பு, ஊழல்,சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் பணம் பெற்றது உள்ளிட்ட காரணங்களால் திருமயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரனை  திருச்சி சரக டிஐஜி வருண்குமார்  பணியிடை நீக்கம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.