புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு அடித்தது ஜாக்பாட்! கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு..!

 
1

தமிழக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சட்டமன்ற பேரவையில் விசிக ஜோதிமணி பேசியதாவது,பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய கார் இல்லை என்றும், பல உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருப்பதாக அவைத் தலைவரிடம் கார் வேண்டி கோரிக்கை வைத்திருந்தார்.

திட்டத்தின் பின்னணியும் நோக்கவும் :

சட்டமன்றத்திற்கு முதல்முறையாகத் தேர்வாகும் இளம் மற்றும் புதிய மக்கள் பிரதிநிதிகள், தங்களது தொகுதிச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆரம்பக்கட்டத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் போக்கும் நோக்கில் இந்நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

விரைவான போக்குவரத்து வசதி: தொகுதியின் பல்வேறு கிராமப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும், அவசரக் காலங்களில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் பிரத்யேக வாகன வசதி பேருதவியாக இருக்கும்.

நிர்வாக உதவிகள்: பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்தல், அரசுத் துறைகளுடனான தொடர்புகளைப் பராமரித்தல் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதற்குப் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

யார் இந்த ஜோதிமணி?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி, 85,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். முன்னதாக, அந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்தான் போட்டியிடுவார் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் அரசியல் காரணங்களால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி, ஜோதிமணி போட்டியிட வாய்ப்பளித்தார். இவரது தந்தையான மறைந்த இளையபெருமாள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தீண்டாமையை ஒழிப்பதற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.

மேலும் "இளையபெருமாள் கமிட்டி" மூலம் இந்தியாவின் தீண்டாமையை ஒழிக்க அரசுக்கு மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியவர்தான் இளையபெருமாள். அவரது மகனான ஜோதிமணி, துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

தன் தந்தை சார்ந்த காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர். இருப்பினும், மறைந்த இளையபெருமாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது மகனான ஜோதிமணிக்கு, சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.