1 கோடி குடும்பங்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவச சிலிண்டர் யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!

 
Q

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்குவோம்' என, த.வெ.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக, 'ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால், 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும்' என, சட்டசபையில், முதல்வர் விஜய் அறிவித்தார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச காஸ் இணைப்பு பெற்றோர், மகளிர் உதவித் தொகை 1,000 ரூபாய் பெறுவோர், ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய் வரை உள்ள குடும்பத்தினர் குறித்த விபரங்கள் அடிப்படையில், இலவச காஸ் சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகளின் பட்டியலை, தமிழக அரசு தயாரித்துள்ளது.

தமிழகத்தில், தற்போது 2.40 கோடி வீட்டு சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, 1.10 கோடி. அதில், 42 லட்சம் இணைப் பு கள், பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள். முதல்வர் அறிவித்த திட்டத்தில், ஒரு கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளன.

இது குறித்து, தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இலவச காஸ் சிலிண்டருக்கான தொகையை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தமிழக அரசு செலுத்தும். ஏற்கனவே உள்ள திட்டங்களில் பயன்பெறுவோர் அடிப்படையில், இலவச காஸ் திட்டத்திற்கு பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

ஆனாலும், அனைத்து குடும்பத்தினரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று, அதன் அடிப்படையிலும், பயனாளிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.