திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
Jun 3, 2020, 20:44 IST1591197264000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,286பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.