பெரும் சோகம்..! 100 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு!
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் வட கிழக்கு டெல்லி ஜெயிட்பூர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டில், 100 அடி நீளமுள்ள தகன மேடை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயிட்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு 5 நிமிடங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்தவுடன் டெல்லி டிஜிபி ஹேமந்த் திவாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், டெல்லி போலீசாருடன், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் மீட்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அளித்துள்ளது

