மழை வருது மழை வருது குடை கொண்டு வா... இன்று ஸ்பைசி சிக்கனை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்..!

 
1

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 1/2 கிலோ * மஞ்சள் தூள் - 1/4 * மிளகாய் தூள் - 1/2 * மல்லித் தூள் - 1/2 * கரம் மசாலா - 1/4 * மிளகுத் தூள் - 1/2 * சீரகத் தூள் - 1/2 * உப்பு - சுவைக்கேற்ப * எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் * தயிர் - 2 டீஸ்பூன் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

மசாலாவிற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன் * வரமிளகாய் - 4 * மிளகு - 1 டீஸ்பூன் * சீரகம் - 1 டீஸ்பூன் * பட்டை - 2 துண்டு * கிராம்பு - 2 * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் * சின்ன வெங்காயம் - 10

தாளிப்பதற்கு...

* சீரகம் - 1 டீஸ்பூன் * வரமிளகாய் - 1 * கறிவேப்பிலை - 1 கொத்து * பூண்டு - 5 பல் * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் * தண்ணீர் - சிறிது * உப்பு - சுவைக்கேற்ப * கொத்தமல்லி - சிறிது

 

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வெங்காயத்தை மட்டும் எடுத்து, ஜாரில் போட்டு, அத்துடன் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு சிக்கன் வறுத்து அதே எண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, நீர் சுண்டும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஸ்பைசி சிக்கன் தயார்.