ஊழல் செஞ்சா ஆபீஸ் மட்டும் இல்ல.. உங்க வீட்டுலயும் ரைடு நடக்கும் - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்..!

 
1

தமிழகத்தில் கடந்த, 4ம் தேதி, 46 சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 38 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது, பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் தரப்பில், சார் பதிவாளர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டன.பெரும்பாலான இடங்களில், தங்களுக்கு வேண்டிய உதவியாளர்களை, பொறுப்பு சார் பதிவாளர்களாக நியமித்து, மாவட்ட பதிவாளர்கள் வசூல் வேட்டை நடத்துவது குறித்தும், அப்போது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில், பதிவுத்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில், அமைச்சர் பேசியுள்ளதாவது: பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையிலேயே, 46 சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை டி.ஐ.ஜி., அலுவலகங்கள் மீதும், மக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இந்த அலுவலகங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இருந்து தப்பி விட்டதாக நினைக்க வேண்டாம். பொதுமக்கள் தெரிவிக்கும் லஞ்ச புகார்கள் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் அலுவலகம், வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படும். எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்குள், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.