எதிரிக்கட்சியல்ல... நல்ல எதிர்க்கட்சி - ஸ்டாலின் பாணியில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிக்கை..!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய்க்கு திமுக சட்டமன்ற குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் பதிவில் "தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில் 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க திமுக தலைவர் எங்க உயிரான மு.க.ஸ்டாலினுக்கும், திமுக பொதுச்செயலாளர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
திமுக தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 10, 2026
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும்,…

