“ஒரு கட்சி நடத்துவது சாதாரண விஷயமல்ல... உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்” - துரைமுருகன்
Oct 20, 2025, 16:44 IST1760958841712
எல்லாரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துப் போகும் திறமை எந்தக் கட்சிக்கு உள்ளதோ அந்தக் கட்சி வெற்றி பெறும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு கட்சி நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல, கட்சியை நடத்துகிற தலைவருக்கு முகத்தில் இரண்டு கண் அல்ல, முழுவதும் கண் இருக்க வேண்டும். உடல் முழுவதும் சிந்திக்கிற திறமை இருக்க வேண்டும். எல்லோரையும் ஒன்று சேர்ந்து அரவணைத்துப் போகும் திறமை எந்தக் கட்சிக்கு உள்ளதோ அந்தக் கட்சி வெற்றி பெறும், செழிப்படையும். அது இல்லாத கட்சி கொஞ்ச காலத்தில் இல்லாமல் போகும்’ என்றார்.


