இது பஸ் இல்ல சார்... விமானத்தில் நின்றவாறே பயணம் செய்த பயணியால் அதிர்ச்சி..!

 
1
மும்பை - வாரணாசி இடையே செவ்வாய்க்கிழமை (மே 21) இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானம் காலை 7.50 மணியளவில் 6E 6543 என்ற அவ்விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், ஆண் பயணி ஒருவர் விமானத்தின் பின்பகுதியில் நின்றபடி இருந்ததை விமானப் பணியாளர் கண்டார்.

அதனையடுத்து, உடனடியாக அதுபற்றி விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட, விமானம் மீண்டும் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டது என்று சந்தீப் பாண்டே என்ற பயணி கூறினார்.

உரிய இடத்திற்குத் திரும்பியபின் அப்பயணி இறக்கிவிடப்பட்டார் எனவும் மற்ற எல்லாப் பயணிகளின் உடைமைகளும் உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டபின் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது எனவும் அகிலேஷ் சௌபே என்ற பயணி சொன்னார்.

இதனால், விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது.

சம்பவத்தை இண்டிகோ நிறுவனமும் உறுதிப்படுத்தியது.காலி இருக்கைகளுடன் புறப்பட சாத்தியமுள்ளதால் விமான நிறுவனங்கள் விமானத்திலுள்ள இருக்கை எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதல் பயணிகள் முன்பதிவு செய்வது வழக்கந்தான் எனக் கூறப்படுகிறது.