ஒரே ஒரு நொடி தான்.. ஜீப்பில் இருந்த டிரைவர் உடல் நசுங்கி பலி..!
உ.பி-யில் மின்வாரிய அலுவரின் அலுவலக பயனுக்காக அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் இன்று டிரைவர் மட்டும் பயணித்துள்ளார்.
ராம்பூர் - நைனிதல் நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் சிக்னல் விழுந்தது வலது பக்கம் திரும்பியுள்ளது. அப்போது, அதேசாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் கார் டிரைவரின் உடலை நீண்ட போராட்டத்திற்குப்பின் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tragic accident in #Rampur, UP: Overloaded truck carrying hay overturned onto a government Bolero near Pahadi Gate on Nainital Road, crushing and killing the driver instantly. SDO's vehicle; police investigating overloading as key factor. #accident pic.twitter.com/J4LtK79ghS
— Thepagetoday (@thepagetody) December 29, 2025


