இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல... இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!

 
Gold

வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை கண்ணை கட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் தங்கம் விலை குறையும்.

ஆனால் வட்டி விகிதத்தை உயர்த்தும் அளவிற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் இல்லை. இதனால் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத கூட்டத்தில் எடுக்கப்படுகிற வட்டி விகித உயர்வு குறித்த முடிவானது இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை தங்கம் விலை ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா? என்றால், இப்போதைக்கு ஆம் என்பது தான் பதிலாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தங்க விலை உயர்வு சொற்ப அளவில் நகை வாங்குகிறவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், நகை முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 12) தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.14,200-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து, ரூ.13,600-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது.

இன்று (ஆகஸட் 13) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.