பார்க்கவே ஆச்சரியமா இருக்கே! 5.2 கிராம் எடையில் உலகையே வியக்க வைத்த 2 தலை ஆமை!
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வெல்ஃப்ளீட் (Wellfleet) பகுதியின் பாதுகாக்கப்பட்ட ஆமை இனப்பெருக்க மையத்தில், இரண்டு தலைகளுடன் பிறந்த மிகவும் அரிதான 'டைமண்ட் பேக் டெர்ராபின்' (Diamondback terrapin) வகை ஆமைக் குஞ்சு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 5.2 கிராம் மட்டுமே எடையுள்ள இந்தச் சிறிய ஆமைக் குஞ்சை மீட்டு, கேப் வனவிலங்கு மையத்தின் (Cape Wildlife Center) மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஒரே உடலில் இரண்டு தலைகள் இருக்கும் இந்த அரிதான நிலையை மருத்துவ உலகில் 'பைசெஃபாலி' (Bicephaly) என்று அழைக்கின்றனர்.
இதுகுறித்து கேப் வனவிலங்கு மையம் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு ஆமைகளுக்கு மட்டுமே இதுபோன்று இரண்டு தலைகள் இருந்ததை நாங்கள் பார்த்துள்ளோம். எனவே இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். இந்த ஆமையின் இரண்டு தலைகளும், உடலும் இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள எங்கள் விலங்கியல் மருத்துவக் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
நியூ இங்கிலாந்து வனவிலங்கு மையங்களின் முதன்மை செயல் அதிகாரி ஜாக் மெர்ட்ஸ் (Zak Mertz) கூறுகையில், "தற்போது வரை அந்த ஆமையின் இரண்டு பக்கங்களும் ஆரோக்கியமாக உள்ளன; இயல்பாகவே செயல்பட்டு வருகின்றன" என்றார்.

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் இந்த 'டைமண்ட் பேக் டெர்ராபின்' வகை ஆமைகள் அழிவின் விளிம்பில் உள்ள (Threatened species) உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பும் இந்த மருத்துவ மையத்தினர் வீட்டின் கழிப்பறைக்குள் சிக்கிய ஆந்தை, நாய் குட்டி என நினைத்து வளர்க்கப்பட்ட நரி குட்டி மற்றும் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வாத்து எனப் பல விசித்திரமான விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.