இனி தங்கம் வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான்...4 நாட்களில் ரூ.6,120 உயர்வு..!

 
Gold

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டால் தங்கம் விலை உயரும். இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95.16. இது ஒரு காரணம் என்றாலும், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் குறைந்திருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இனிவரும் நாட்களில் தங்கம் விலை கணிக்க முடியாத வகையில் இருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து விற்பனையாகிறது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 8) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.6,120 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.