குழந்தைகளை பார்க்க விடலைன்றது அப்பட்டமான பொய்..! ரவி மோகனுக்கு மாமியார் சுஜாதா கொடுத்த பதிலடி..!
நடிகர் ரவிமோகனின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ரவிமோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அவர் இவ்வாறு பேசக்கூடாது. அவர் தரப்புதான் நியாயம் என்பது போல மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார்.
நான் இதை சட்டத்தின் வழி நின்று உண்மை எதுவென அனைவருக்கும் உணர்த்துவேன். இதனை நான் பெரிது படுத்தாததற்கு காரணமே என் பேரன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, இந்த பிரச்சனையால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறான். இளம் வயதிலேயே பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்து விட்டான். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான்" என்றார்.
ஆர்த்தி மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என ரவிமோசன் கூறுவது பொய் கையை அறுத்துக் கொண்டு, மிரட்டி யார் திருமணம் செய்தனர்? என்பது விரைவில் வெளியே வரும். ஒரு பெண்ணிற்கு அநியாயம் நடந்தால், மற்ற பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள். மருமகனான ரவி மோகன் மீது இன்னும் மரியாதை உள்ளது.
ஒன்றரை வருடமாக நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை இன்று ரவி மோகன் பேசி உள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்யாததால், அழ மாட்டேன், எமோஷனல் ஆக மாட்டேன். ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல்.
ரவி மோகனுக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுவது பொய். என் மீதான அவதூறுகளுக்கு நான் நிச்சயம் பதில் சொல்வேன்.
திருமணமான பிறகு ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பது தவறில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை நான் இதுபற்றி பேசியதில்லை. எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்.
இவ்வாறு சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

