வருமான வரி சோதனை நிறைவு - லாக்கருக்கு சீல்

 
செந்தில் பாலாஜி

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

tn

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி  வருவதாக கூறப்பட்ட நிலையில் , செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அவரது இல்லம் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை தனது தம்பியின் வீட்டிலேயே நடைபெறுவதாக செந்தில்பாலாஜி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை முடிவில் ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது வீட்டில் ரூ.30,000 வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றதாக தெரிகிறது.