“இப்போதைக்கு கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது” - அண்ணாமலை

 
tn

ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் அனுப்பிய நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Tamilisai

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். தென்சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில், பாஜக வேட்பாளராக தமிழிசை போட்டியிட உள்ளார்.

Annamalai

இந்நிலையில் "இப்போதைக்கு, நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குடியரசுத் தலைவரிடமிருந்து முறையான அறிவிப்பு வெளியாகும் வரை, அரசாங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து கட்சி உறுப்பினர்கள் யாரும் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் அனுப்பிய நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.