"அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்" - எடப்பாடி பழனிசாமி

 
eps

நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலா செயல்பட்டால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்ததைப்போல ஒரு மாயத் தோற்றத்தை அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். மாநிலத் தலைவராக  இருந்தபோது ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தை பெற்றுத்தந்துள்ளார்? ஒன்றுமே கிடையாது.

EPS

ஜெயலலிதாதான் அதிமுகவை இனி ஏற்று நடத்துவார், அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப் போல, நற்பண்புடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலாவும் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர் என்றார்.