அப்போ இனித்தது.. இப்போ மட்டும் கசக்குதா?? திமிரா நடந்துக்காதீங்க - பாஜகவினரை விளாசிய செல்லூர் ராஜு..

சென்னை அதிமுக தலைமைக் கழகட்தில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச்செயலாளர் தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதா? என்கிற கேள்விக்கு, தனக்கு தெரியவில்லை என்றும் கூட்டத்தில் பங்கேற்றால்தான் அது குறித்து தெரியும் என்றும், ஒருவேளை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்..
பாஜகவினர் , அதிமுகவில் இணைவது குறித்து அண்ணாமலையின் கருத்துக்கு பதில் அளித்த அவர், “பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை; அதிமுக, திமுக, பாஜக என ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு இணைவது இணைவது சகஜம்தான். அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தபோது இனித்தது; தற்போது பாஜகவில் அதிமுகவில் இணையும்போது மட்டும் கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை, வாய் அடக்கம் வேண்டும். வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளுகின்றோம் என்கிற திமிரோடு நடந்துகொள்ளக் கூடாது. கூட்டணி கட்சியை என்கிற பெயரில் தோலில் உட்கார்ந்து கொண்டு காதை கடிப்பதை அண்ணா திமுக என்றும் பொருத்து கொண்டு இருக்காது..
எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்கின்ற அளவுக்கு, பஜகவினர் தரம் தாழ்ந்து போய்விட்டனர். ஒரு காலத்தில் பாரதிய ஜனதா என்றால் மதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு பாஜகவில் தகுதியற்றவர்கள், விஷக்கிருமிகள் இருக்கிறார்கள் என்பது தான் இதிலிருந்து தெரிகிறது. இவர்களை எல்லாம் அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலையை வாய்க்கொழுப்பாக பேசுகிறார். புரட்சித்தலைவி அம்மாவை போன்று நானும் தலைவன் தான் என்று கூறியிருக்கிறார். அம்மாவுக்கு இணையாக ஒரு தலைவன் பிறக்கவில்லை.. மோடியா?.. லேடியா?.. என்று இருந்தபோதும் கூட லேடி தான் என தமிழகத்தில் முடிசூட்டினார். தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அம்மையார். அவரை போல் எவனாலும் வர முடியாது; ஊர் குருவி என்னதான் உயர உயர பறந்தாலும், மருந்தாக முடியாது” என்று தெரிவித்தார்.