திமுக ஆட்சியில்தான் நூல்கள் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது- தவெக
Nov 6, 2026, 17:17 IST1793965643247
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தவெக தனது எக்ஸ்தளத்தில், "ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல மூளையற்ற திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது.
ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு புத்தகக் கொள்முதல் ஆணையை தீயசக்தி திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 13/02/2026" எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் இணைத்துள்ளது.

