ஃபெஞ்சல் புயல்- ஐடீ ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அறிவுறுத்தல்

 
ஃபெஞ்சல் புயல்- ஐடீ ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அறிவுறுத்தல்

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Cyclone Remal Threatens West Bengal And Odisha Coasts: When Will It Hit And  What You Need to Know? - Oneindia News

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work from Home)

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

12 work-from-home setup essentials | Mural

பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம். 30.11.2024 அன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.