#BREAKING அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!!
Updated: May 26, 2023, 08:58 IST1685071733364

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமேஸ்வர பட்டியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
அதேபோல் கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.