கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை!

 
dmk

கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இல்லத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மீனா ஜெயக்குமார் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளராக உள்ளார்.