#BREAKING நாளை விஜய் பதவியேற்பதில் சிக்கல்?
முதல்வராக விஜய் நாளை (07.05.2026) பதவியேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக விஜய் நாளை (07.05.2026) பதவியேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் விவரத்தை ஆளுநரிடம் விஜய் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. 118க்கு பதிலாக 112 பேர் மட்டுமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் விஜயால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால்தான் ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார். ஆகவே மே 7 அன்று விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பில்லை. நாளை மாலைக்குள் ஆளுநர் கேட்ட பட்டியலைக்கொடுத்தால் மே 8 அன்று பதவி ஏற்க வாய்ப்பு உண்டு. 8 ராசியில்லாத எண் என்று நினைத்தால், மே 8 அன்றும் பதவி ஏற்பு நடக்காது. மே 9 - அஷ்டமி - பதவி ஏற்பு நடக்காது. மே 10 - அஷ்டமி - பதவி ஏற்பு நடக்காது. மே 11 - நவமி - பதவி ஏற்பு நடக்காது. மே 12 - செவ்வாய்கிழமை - பதவி ஏற்பு நடக்காது. அடுத்த வாய்ப்பு மே 13 புதன்கிழமைதான். அன்றைக்கு முகூர்த்தநாள் என்பது கூடுதல் தகவலாகும்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடதக்கது.

