“விஜய் மகன் சஞ்சய் என்னுடன் பேசியது உண்மை தான்" - கவின் தகவல்

 
tn

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் சினிமா தொடர்பான படிப்பினை முடித்துவிட்டு தற்போது தனது முதல் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.  லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

tn

 இது தொடர்பாக அண்மையில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவினிடம்  இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது பேசிய கவின்,  விஜயின் மகன் சஞ்சய் தன்னை நேரில் சந்தித்து இந்த படம் குறித்து பேசினார். கதையில் சில மாற்றங்கள் செய்த பின்பு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறினார். ஆனால் அதன் பிறகு தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கும் வேலைகள் நிறைய இருக்கு.  அதனால் அப்படியே போய்ட்டு இருக்கு என்றார். 

kavin

தொடர்ந்து பேசிய அவர்,  விஜய் சார் ரொம்ப சிம்பிள்.  அப்படின்னு எல்லாருக்குமே தெரியும்.  ஆனா அவர் சன் எப்படி இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  அவர் அவரை விட மிகவும் சைலன்ட்,  ஹம்பிலான ஒரு மனிதராக இருக்கிறார்.  இது எனக்கே பெரிய பிரமிப்பை கொடுத்தது.  நம்ம இன்னும் நெறைய கத்துக்கணும் அப்படிங்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சிச்சு என்றார்.