இந்தியாவையே மாற்றப்போகும் ஒரு பொருள்.. வெளிநாட்டு கச்சா எண்ணெய்க்கு இனி டாட்டா?
Jul 18, 2026, 20:03 IST1784385237076
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஒரே இரவில் மாறக்கூடும். ஆனால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால் விலைகள் அவ்வாறு மாறுவதில்லை.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, மேலும் வலுவான ஒரு எரிசக்திச் சூழலமைப்பிற்கு வழிவகுக்கிறது.
எரிபொருள் விநியோகச் சங்கிலியில் உள்நாட்டுப் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

