அடம்பிடிக்கும் பாமக.. விட்டுக்கொடுக்குமா அதிமுக?

 
tn

அதிமுக - பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாமக விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை முதல் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம் செய்கிறது. 

ep

இந்நிலையில் அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

anbumani

இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.