“தாயாரை இழிவுபடுத்துவது நாகரிகமல்ல!”: நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

 
annamalai

 வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை  அறிக்கை:

தமிழகத்தின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதியைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, முதல்வர் விஜயின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்.

ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகி போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.

இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.