8ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்..தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

 
1
நிறுவனம் Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 01.03.2026
கடைசி தேதி 31.03.2026

 

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் (TANSI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

1. பதவி: ஓட்டுநர் (Driver)

சம்பளம்: Rs.19,500 – 62,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி + 5 வருட அனுபவத்துடன் LMV உரிமம்

2. பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: Rs.15,700 – 50,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி + மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • UR / MBC & DNC / BC: 18 – 34 ஆண்டுகள்
  • SC / ST: 18 – 37 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 01.03.2026 காலை 10 மணியிலிருந்து 31.03.2026 மாலை 5 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், எண்: 28, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032