THE GOAT திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

 
tn

THE GOAT  திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

tn

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறா. ர் கோட் என்ற டைட்டில் இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த் ,பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 sivakarthikeyan

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இப்ப படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்,  போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  இந்த சூழலில் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும்  சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.  ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என்று கூறப்படுகிறது.