ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

 
1 1

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலச்செனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேமானந்த். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த 14ம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.86 லட்சத்திற்கு செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தனது கிரிடிட் கார்டு மூலம் அவர் ஆடர் செய்துள்ளார்.

இந்நிலையில், பிரேமானந்த் ஆர்டர் செய்த செல்போன் பார்சல் கடந்த 19ம் தேதி மாலை வீட்டிற்கு வந்து வந்துள்ளது. டெலிவரி ஊழியர் அந்த பார்சலை பிரேமானந்த்திடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த பிரேமானந்த் பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் செல்போனுக்கு பதில் வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் கல்  இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமானந்த் உடனடியாக இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் பிரேமானந்த் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.