ஊழியர்களுக்கு work from home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்

 
work from home

சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐடி நிறுவனங்கள் நேரடியாக பணிக்கு வர வேண்டுமென வலியுறுத்துவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

WFH -ஐ நிறுவனங்கள் விரும்பவில்லை - ஆய்வில் தகவல்! – News18 தமிழ்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாளை காலை முதல் துவங்கும் என சொல்லப்பட்டு இருக்கிறது. நிபுணர்களும் நாளை அதிக மழைக்கு வாய்ப்பு  இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக 16,17 ஆகிய தேதிகளில் மிக அதிகமான மழை இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அதிக கனமழை வரும் என தெரிவித்திருக்கிறார்கள். நாளை சென்னை மற்றும் மூன்று சுற்று வட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் நாளை முதல் 4 நாட்கள் work from home-யை கடைபிடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐடி நிறுவனங்கள் நேரடியாக பணிக்கு வர வேண்டுமென வலியுறுத்துவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள் தற்போது வரை work from home-யை அறிவிக்கவில்லை. சென்னை ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி ஆகிய பகுதிகளில் மின்சாரம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி ஆகிய சாலைகளில் சாதாரண நாட்களிலேயே கடும் வாகன நெரிசல் ஏற்படும், மழைநீர் தேங்கி நின்றால் பணிக்கு செல்வது சிரமம் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.