“உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மனு அளிப்பது வேஸ்ட்”- அதிகாரிகள் முன்பே மனுவை வீசி எறிந்த பெண்

 
ச் ச்

சிவகாசியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலளிக்கும் மனுவால் எந்தப் பயனும் இல்லை என ஆவேசமாகப் பேசி கோரிக்கை மனுக்களைத் தூக்கி வீசிய பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?


சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு, பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை பதிவேற்றம் செய்வது, மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்புப் பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அப்போது நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்மணி நதிக்குடி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் அரசு நிலத்தை அதிமுகப் பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அதில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வாடகைத் தொகை வசூலித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கிராமத்திற்குத் தேவையான சமுதாயக்கூடம் போன்ற அரசுக் கட்டிடங்களை அந்த இடத்தில் கட்டித் தருமாறு ஆட்சியர் சுகபுத்திராவிடம் கோரிக்கைமனு க்கொடுத்தார் . 

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் மனுதாரரிடம் குறைகளைக் கேட்டறியாமல் மனுவை மட்டுமே பெற்றுச் சென்றதால் ஆவேசமடைந்த அந்த பெண்மணி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டு மென ஏராளமான மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் அதிகாரிகள் யாருமே நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அரசு அதிகாரிகள் எல்லாம் சும்மா தான் இருக்கிறீர்களா? என ஆவேசமாகப் பேசி மனு அளிக்க வந்த முதியவரின் மனுவை ப் பறித்து தூக்கி வீசியதுடன், இந்த மனுக்களைக் கொடுப்பதினால் எந்தவிதமான பயனு ம்மில்லை என ஆக்ரோஷமடைந்த சம்பவம் குறித்த வீடியோக் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.