இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது- இஸ்ரோ தலைவர் நெகிழ்ச்சி

 
சோம்நாத்

அடுத்த 14 நாட்களுக்கு நம் தேசத்துக்கு உற்சாகம் தரக்கூடிய நிகழ்வு இது என  இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Image

இஸ்ரோ அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், “சந்திரயான் 3 திட்டத்திற்காக உழைத்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல் உள்ளிட்ட
அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம். சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த  இடத்தில் நிற்கிறோம். சந்திரயான் முந்தைய தோல்வியில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அடுத்த 14 நாட்கள் காத்திருக்கிறோம்.  இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது. அடுத்த 14 நாட்களுக்கு நம் தேசத்துக்கு உற்சாகம் தரக்கூடிய நிகழ்வு இது. அடுத்ததாக சூரியனை நோக்கிய ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம், நிலவை தொடர்ந்து அடுத்ததாக சூரியனுக்கு தான். சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.1 திட்டம் தயாரகவுள்ளது” என்றார்.


முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி, சந்திரன் -3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.