தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்
Sep 4, 2023, 08:42 IST1693797146939

ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த 2012-ல் விண்ணில் ஏவப்பட்ட RISat 1 திட்ட இயக்குனராக பணியாற்றினார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்