விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் மேற்பரப்பு படங்களை வெளியிட்டது இஸ்ரோ

 
isro

லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

படம்

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. அதன்பின், நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அதிலுள்ள சென்சார்கள் மூலம் தரையிறாங்க சரியான சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டு, வெற்றிகரமாக தரையிறங்கியது.


இந்நிலையில் சந்திரயான் - 3 லேண்டருக்கும் பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொலைத்தொடர்பு இணைப்பு வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அத்துடன், லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.