மூன்று ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளோம் - இஸ்ரோ தலைவர் .!
இஸ்ரோ தலைவர் நாராயணன் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
"கடந்த 40 வருடங்களுக்கு முன்பு வானிலை அறிவிப்பு இருந்ததை விட பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை அறிவதற்காக பல செயற்கோள்களை அனுப்பி வைத்துள்ளோம்.
வானிலை சம்பந்தமான தகவலை அறிவதற்கு முதன்மை பொறுப்பு ஐஎஸ்ஆர்ஓ இல்லை, ஐஎம்எப்ஓ ஆகும். நாங்கள் அனுப்பியுள்ள செயற்கை கோள்களை வைத்து மிகத் துல்லியமாக வானிலை ஐஎம்டி கணித்து வழங்கி வருகிறது."
"ககன்யான் ஆட்களைக் கொண்டும் செல்லும் ராக்கெட் என்பதால் மிகத் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சென்று திரும்ப வேண்டும். ஆகையால், அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதுவரையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளை செய்து முடித்துள்ளோம். ககன்யான் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
விண்வெளிக்கு ககனியான் மூலமாக செல்லும் ஆட்கள் விண்வெளியில் இருக்கும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பதற்கு 'குரு எஸ்கப் சிஸ்டம்' என்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி அதனையும் வெற்றிகரமாக சோதித்துள்ளோம்.
ககன்யான் திட்டத்திற்கான மூன்று ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்பவும். அதில் முதல் ராக்கெட்டை இந்த ஆண்டு இறுதியில் அனுப்ப உள்ளோம்.
இந்த மூன்று சோதனையும் வெற்றி பெற்றவுடன் 2027ஆம் ஆண்டு ககன்யான் ராக்கெட்டை ஆட்களுடன் விண்ணுக்கு செலுத்துவோம்.
மீனவர்கள் இந்திய கடல் எல்கையை கடந்து வேறுநாட்டிற்கு செல்லாமல் இருப்பதற்காக ஆப்ஸ் கொடுத்துள்ளோம். அதன் மூலமாக தெளிவாக எந்த பகுதியில் இருக்கிறோம் என எல்கைகளை தெரிந்து கொள்ளலாம். எந்த பகுதியில் அதிகமான மீன் இருக்கிறது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலமாக தமிழிலிலேயே செய்தி கிடைக்கும். இதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆப்ஸ்களை வழங்கி உள்ளோம்."
"இந்திய விண்வெளி ஆராய்ச்சியானது இந்திய மக்களுக்காக முதலில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வணிக ராக்கெட்டுக்காக ஆரம்பிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது இந்திய ராக்கெட் தொழில்நுட்பம் உலக வணிக அளவில் 2சதவீதத்தில் உள்ளது. இதனை 10சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது பத்தாயிரம் கிலோ அதிகளவிலான செயற்கைக் கோள்களை அனுப்புவதற்கு ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பி வருகிறோம்.
40,000 கிலோ கொண்டு செல்லும் ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளோம். ககன்யான் திட்டத்திற்கு ஆட்களை அனுப்புவதற்கு 80 ஆயிரம் கிலோ செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் தேவைப்படும். 80,000 கிலோ கொண்டு செல்வதற்கான ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியும் சோதனைகளும் துரிதமாக நடந்து வருகிறது என்று பேட்டியின்போது அவர் கூறினார்.


