நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி - சத்குரு

 
s

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஈஷா சார்பில் நடைபெற்ற ‘நேபாளத்துக்கு துணை நிற்போம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. சத்குரு, மனிஷா கொய்ராலா மற்றும் ஈஷாவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சத்குரு, இமயமலைப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய 'இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்' சார்பில் 1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள சத்குரு, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.