கானா பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது மோசடி புகார்

 
isai

பிரபல கானா பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

Gana isaivani fans&club - Home | Facebook

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவன தயாரிப்பில் casteless collective என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி. பிபிசி தேர்ந்தெடுத்த 100 சாதனைப் பெண்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருந்தார். 

இந்நிலையில் இசைவாணி தனது முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பபுலு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு சதீஷ் என்பவரோடு திருமணம் நடந்தது. அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்து பெற்றேன். விவாகரத்து ஆன பிறகும் சதீஷ் தன்னை மனைவி என்று மீண்டும் கூறிக்கொண்டு சமூக வலைதளப் பக்கங்கள் உருவாக்கி மோசடியில் ஈடுபடுகிறார். தனது பெயரை பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் சதீஷ், பலரிடம் தன்னை நிகழ்ச்சியில் பாட வைப்பதாக கூறி முன்தொகை வாங்கி மோசடி செய்துள்ளார். தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் தனது முன்னாள் கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தொடர்ந்து இதுபோன்று தான் செயல்படுவேன் எனவும் ,முகத்தில் ஆசிட் வீசுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.