தேமுதிகவில் இருந்து விலகுகிறாரா விஜய் பிரபாகரன்?
Feb 19, 2026, 15:59 IST1771496978766
தேமுதிகவை விட்டு விஜய் பிரபாகரன் விலகுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் இருக்கும் கட்சியில் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறிய நிலையில் இப்போது தேமுதிக திமுக உடன் கூட்டணி வைத்ததால் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸும் அதனுடைய இணைந்து இருப்பதால் தேமுதிகவை விட்டு விஜய் பிரபாகரன் விலகுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து, 'நாளை நமதே' என இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.

