"த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?" — தவெக தலைவர் விஜய்யை சாடிய ஆர்.எஸ். பாரதி!
Aug 4, 2026, 13:31 IST1785830473132
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், "‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் குறித்து ஏ, பி, சி கூட அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் த்ரிஷாவின் பெயரைக் கூறினார். அதில் என்ன தவறு இருக்கிறது? தண்ணீர் என்பது குடிப்பதற்கானதுதானே. அந்த விவகாரத்தை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம்.
த்ரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம்? த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்?" என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

