நாகை மாவட்டத்திற்கு நாளை விடுமுறையா?- வெளியான அறிவிப்பு

 
கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் நாகை கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை செருதூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நாகை மீன்பிடித் துறைமுகம் புயல் அறிவிப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.  

rain

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில், தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.