இதைத்தான் இன்ஸ்டன்ட் கர்மா (Instant Karma) என்பார்களோ? பைக்கைத் திருட முயன்ற நபரை தாக்கிய மின்னல்..!
இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற நபர் ஒருவர், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற பிரகாசமான ஒளியாலும் பயங்கர சத்தத்தாலும் தூக்கி வீசப்படும் சிசிடிவி (CCTV) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மழையில் நனைந்தபடி பைக்கின் அருகே வரும் நபர் ஒருவர், அதன் இயந்திரத்தை இயக்கித் தப்பிச் செல்ல முயல்கிறார். அவர் வாகனத்தை நகர்த்த முற்படும் அதே நொடியில், அவருக்கு மிக அருகிலேயே கண்களைக் கூசச் செய்யும் அளவிற்குப் பலத்த வெளிச்சமும் சத்தமும் ஏற்படுகிறது. இதனால் நிலைகுலைந்து போன அந்த நபர், பைக்குடன் சாலையில் சரிந்து விழும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் "உடனடி கர்மா" (Instant Karma) மற்றும் "இயற்கையின் நீதி" என்ற தலைப்புகளுடன் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகின்றன. திருட முயன்ற நபரை இயற்கையே மின்னல் மூலம் தண்டித்துவிட்டதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவும் இந்தக் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த காவல்துறை அறிக்கை இல்லை.
बाइक चोरी की कोशिश के दौरान आसमानी बिजली का कहर लोगों ने कहा—प्रकृति का तुरंत न्याय https://t.co/mty2pA4pEa
— 𝑺𝑺 𝒀𝒂𝒅𝒂𝒗⚡ (@Silent5v) November 26, 2026

