ஒரு மருத்துவர் செய்யுற வேலையா இது..? கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து...

 
1 1

சென்னை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (27). மருத்துவரான இவர் அப்பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவனையில் மருத்துவ பயிற்சிக்காக தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வரும் 22 வயதான இளம்பெண் வந்துள்ளார்.

மருத்துவ பணிகளை அந்த பெண் மேற்கொண்டு வந்த நிலையில் கொரட்டூரில் உள்ள ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என மருத்துவர் கார்த்திக் அந்த பெண்ணை கொரட்டூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம் பெண்ணிற்கு மருத்துவர் கார்த்திக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

குளிர்பானம் குடித்த உடன் அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் அவரை மருத்துவர் கார்த்தில் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு தான் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்த அந்த இளம்பெண் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக மருத்துவர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.