12 வயது சிறுவன் செய்யுற வேலையா இது..? 9 மாத குழந்தைக்கு வன்கொடுமை..!

 
1

கோரக்பூர் மாவட்டத்தில், 12 வயது சிறுவன் 9 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சண்டிகரைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அச்சிறுவன் அக்குழந்தையின் உறனிவன் என்றும், கடந்த மூன்று நாட்களாக அக்குழந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தான் என்றும் கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இரவு கோரக்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், அக்குழந்தை தனது தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்தபோது அச்சிறுவன் அவளைக் கடத்திச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த பிறகு, அச்சிறுவன் குழந்தையை வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் தகரக் கொட்டகையில் விட்டுச் சென்றான்.

இந்த சம்பவம் குறித்து அழுதபடி விளக்கிய குழந்தையில் தாய், வெள்ளிக்கிழமை இரவு தனது ஒன்பது மாதக் குழந்தையுடன் தான் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், அதிகாலை 2 மணியளவில் விழித்தெழுந்தபோது குழந்தை காணாமல் போயிருந்ததை கண்டறிந்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு குடும்பத்தினர் இரவு முழுவதும் குழந்தையைத் தேடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. குடும்பத்தாருடன் சேர்ந்து சிறுவனும் குழந்தையை தேடுவது போல நாடகமாடினான்.

சனிக்கிழமை காலை, வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியில், தகரக் கொட்டகையில் குழந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர். குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை உள்ளூர் மக்கள் கவனித்ததையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாகக் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என பலரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, ​​காவல்துறையினர் சிசிடிவி (CCTV) காட்சிகளையும் ஆய்வு செய்தனர். குற்றச் சம்பவம் நடந்த இடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், குழந்தையின் தாய்மாமனான அந்த சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது.

அடுத்த கட்டமாக, அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, தான் மதுபோதையில் இருந்ததாகவும், குழந்தையை தூக்கிச் சென்று அருகிலுள்ள வயல்வெளியில் வைத்து இந்த கொடிய செயலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

அந்த சிறுவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அந்த சிறுவன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டான். சம்பவத்தன்று நன்றாக மது அருந்தியத சிறுவன், பின்னர் மொபைலில் ஆபாச படம் பார்த்துள்ளான். அதன் பிறகு வீட்டிற்குச் சென்று, தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

காவல்துறை அதிகாரிகள் சிறுவனின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை சிறுவன் பார்த்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.