தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி! 15 நாட்களில் ரூ.15,000 சரிவு — வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்!

 
Gold

தங்கம் விலை குறைவு இன்னும் தொடருமா? அல்லது திடீரென அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டால் இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு இடையிடையே விலையேற்றத்துடன் பெரும்பாலும் விலை குறையவே வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கம் விலை குறைவதாக பலர் நினைத்தாலும், அமெரிக்க பொருளாதார நிலையற்ற தன்மையே தங்கம் விலை குறைய காரணம் என விளக்குகின்றனர்.

 

அங்கு விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பே, அமெரிக்க ஃபெடரல் வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தை குறைத்துவிட்டது. இதனால் தங்கம் விலை குறைந்தாலும், இந்த விலை குறைவு நிலையானது அல்ல என்கின்றனர். அடுத்த சில மாதங்களில் படிப்படியாக குறைந்து இந்தியாவில் ஒரு சவரன் விலை ரூ. 90 ஆயிரம் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றனர். எனவே சிறிய அளவில் தங்கம் வாங்க நினைப்போர் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர்.

 

நேற்று (நவம்பர் 18) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், ஒரு சவரன் ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.180-க்கு விற்பனையானது.

இன்று (நவம்பர் 20) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3,760 குறைந்து, ரூ.92,080-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,75,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை 15 நாட்களில் 15,000 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.30 லட்சத்தை எட்டியது. ஆனால் இன்றைய விலையுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட ரூ.35,000 சரிந்துள்ளது.