“திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா?”.. கனிமொழி எம்எல்ஏ கண்டனம்..!
திமுக மேடையில் பெண் நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் விஜயை விமர்சித்துப் பேசியதாக தெரிகிறது. அதே மேடையில் கனிமொழி எம்பி, மேயர் பிரியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி சந்தோஷ் MLA வெளியிட்ட பதிவில், “So Called” பாரம்பரியக் கட்சி என்று அழைக்கபடும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா?. முதலமைச்சரை இழிவாகப் பேசுவதை ரசித்துச் சிரிப்பதுதான் திமுக தலைவர்களின் அரசியல் பண்பாடா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
“பாரம்பரியக் கட்சி” என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரைப் பொதுமேடையில் ஒருமையில் பேசுவதும், இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ரசித்துச் சிரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.குறிப்பாக, திமுக கட்சி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் முதலமைச்சர் குறித்து அருவருக்கத்தக்கவகையில் இழிவாகப் பேசியபோது, அதனை ரசித்து ஆரவாரம் செய்து நகைப்புக்குள்ளாகியது பொதுவாழ்வில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நாகரிகம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
ஒரு மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பு வகிப்பவர், இத்தகைய தருணங்களில் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் நிலைநாட்ட வேண்டாமா? முதலமைச்சர் என்ற அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பில் இருப்பவரைப் பற்றிப் தொண்டர் ஒருவர் பேசும்போது குறைந்தபட்ச மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தனது கட்சியினருக்கு எடுத்துரைக்க வேண்டாமா?
அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கலாம். ஆனால், தனிநபர் இழிவுபடுத்தலையும் கண்ணியமற்ற பேச்சையும் அரசியல் கொண்டாட்டமாக மாற்றுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்களும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் தலைவர்களின் பேச்சும் நடத்தையும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும். பொதுமேடைகளில் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் பேணுவதே அரசியல் நாகரிகத்தின் அடையாளம். இழிவான பேச்சுகளை ரசித்துச் சிரிப்பதால் அரசியல் விவாதத்தின் தரம் உயராது; மாறாக, பொதுவாழ்வின் மாண்பே கேள்விக்குள்ளாகும்.
எனவே, “ So Called ” பாரம்பரியக் கட்சி என்று தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் திமுக, முதலில் பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!! இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா? முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா? திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா? திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா? தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)? அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல. எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும். @PriyarajanDMK @KanimozhiDMK
— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) October 19, 2026

